தேர்தல் பிரச்சாரத்திலும் டூப்புகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தேர்தல் பிரச்சாரத்திலும் டூப்புகள் - காணொளி

  • 12 ஏப்ரல் 2014

திரைப்படங்களில் முக்கியமான காட்சிகளில் சில நடிகர்களுக்காக, அவர் சாயலிலேயே இருக்கும் இன்னுமொருவர் நடிப்பதை (டூப்பு) பார்த்திருப்பீர்கள்.

குறிப்பாக சண்டைக்காட்சிகளில் இப்படியாக நடிப்பது உண்டு.

ஆனால், இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களின்போதும் இப்படி ஒருவர் சாயலில் இருப்பவர் அடுத்தவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது.

முக்கிய வேட்பாளர்களுக்காக அல்லது இறந்துபோன முக்கிய அரசியல் தலைவர்களுக்காக, அவர்களின் சாயலில் இருப்பவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது இந்தியத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.