வங்கதேச ஆடைத்தொழிற்சாலை விபத்தின் ஒரு ஆண்டு பூர்த்தி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேச ஆடைத்தொழிற்சாலை விபத்தின் ஒரு ஆண்டு பூர்த்தி - காணொளி

வங்கதேசத்தில் ஒரு எட்டு மாடி ஆடைத்தொழிற்சாலை இடிந்து விழுந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாகின்றது.

1100 பேர் அதில் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அதில் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ''ரணா பிளாஸா'' என்ற அந்தக் கட்டிடம் உலகின் அனைத்து ஊடகங்களிலும் பெரும் அவப்பெயரைப் பெற்றது.

ஆனால், அந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு இன்னமும் எந்தவிதமான நட்ட ஈடும் வழங்கப்படவில்லை.

இவை குறித்த பிபிசியின் உலக விவகாரச் செய்தியாளர் பால் அடம்ஸ் அவர்களின் காணொளி.