தென்னாப்பிரிக்க விடுதலை தினம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்னாப்பிரிக்க விடுதலை தினம் - காணொளி

இருபது வருட ஜனநாயகத்தைக் கொண்டாடு முகமாக தென்னாப்பிரிக்கா இந்த வார இறுதியில் ‘’விடுதலை தினத்தை’’ அனுட்டிக்கிறது.

ஏப்ரல் 1994இல் அந்த நாட்டின் பல லட்சக்கணக்கான மக்கள் முதல் தடவையாக சுதந்திரமான நியாயமான ஒரு தேர்தலில் வாக்களிக்கக் கூடியதாக இருந்தது.

நிறவெறி ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின்னர், அந்த நாட்டின் கறுப்பு இன மக்கள் பல வழிகளிலும் முன்னேறி இருக்கிறார்கள். ஆனாலும் சமூக ஏற்றத்தாழ்வு இன்னமும் ஏற்க முடியாதக் அளவில்தான் இருக்கிறது.

இந்த இரு தசாப்தகால மாற்றம் குறித்து ஆராய்கிறார் பிபிசியின் மில்டன் நொஸ்கி. அவரது காணொளியை இங்கு காணலாம்.