மேற்கு - கிழக்கு மோதலின் புதிய களம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேற்கு - கிழக்கு மோதலின் புதிய களம் - காணொளி

ஜி 7 பொருளாதார வல்லரசுகளின் குழு ரஷ்யா, யுக்ரெய்னில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை கடுமைப்படுத்தியுள்ளது.

அந்தத் தடைகள் குறித்த விபரங்களை இதுவரை ஜி 7 அறிக்கை தராவிட்டாலும், திங்களன்று விபரம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

க்ரைமியாவை தன்னுடன் இணைத்த ஒரு மாதகாலத்தில், ரஷ்யா, யுக்ரெய்னின் கிழக்குப்பகுதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கு நாடுகள் கண்டித்துள்ளன.

அந்தப் பகுதியில் பிரிவினைக் கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதாக அவை குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், ரஷ்யா அதனை மறுக்கிறது.

அதேவேளை ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்களை கடத்திச் சென்றுள்ளார்கள்.

இது மேற்கு நாடுகளின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அவர்களை மீட்பதற்காக சமரச முயற்சிகளும் ஒருபுறம் நடக்கின்றன.

8 ஐரோப்பிய இராணுவ கண்காணிப்பாளர்களையும், பல யுக்ரெய்னிய இராணுவத்தினரையும் ஸ்லோவியன்ஸ்க்கில் வைத்துக் கடத்திய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரகள், அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.