குட்டி ஈன்ற ஜாவாவின் எலி மான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குட்டி ஈன்ற ஜாவாவின் எலி மான் - காணொளி

  • 28 ஏப்ரல் 2014

குளம்புடைய மிருகங்களில் மிகச்சிறியதான ஜாவாவின் எலி மான் ஒன்று ஸ்பெயினின் தென்பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டி ஈன்றிருக்கின்றது.

பிறந்த குட்டி வெறுமனே 100 கிராம்தான். எலியை விடச் சிறியது.

எலியைவிட கொஞ்சம் பெரியதான, வயதுக்கு வந்த ஜாவா எலி மான்கள், ஒரு கிலோகிராமை விட சற்று கூடுதலான எடையைக் கொண்டிருக்கும்.

இவை மிகவும் புத்திக்கூர்மை உடையவை. ஜாவாவில் குழந்தைகளுக்கான கதைகளில் இவற்றைத்தான் நரியைப் போல புத்திமான்களாக காண்பிப்பார்களாம்.

இந்த மிருகக்காட்சி சாலையில் பிறந்த 8வது ஜாவா எலி மான் இதுவாகும். இதன் தாயும் இங்குதான் 2007இல் பிறந்தது. அருகிப்போகும் இந்த இன மான்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை அந்த மிருகக்காட்சி சாலை நடைமுறைப்படுத்துகிறது.

இந்த மிருகக்காட்சி சாலையின் அடர்ந்த காடு ஒன்றில் இந்த மான்கள் வளர்க்கப்படுகின்றன.

இது குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.