‘’உனக்கு ஒரு தோட்டா தயாராகிவிட்டது’’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘’உனக்கு ஒரு தோட்டா தயாராகிவிட்டது’’ - காணொளி

‘’உனக்கு ஒரு தோட்டா தயாராகிவிட்டது’’ - அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பால் அண்மையில் பாகிஸ்தானில் உள்ள செய்தியாளர்கள் எதிர்நோக்கும் வன்செயல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு இது.

ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவோ அல்லது அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவோ பாகிஸ்தானிய அரசாங்கம் முற்றாக தவறிவிட்டது என்று அம்னஷ்டி கூறுகிறது.

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதி மொழிகளை கூறினாலும், நடவடிக்கைகள் எதுவும் கிடையாது.

பாகிஸ்தானின் பெரிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளார் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் ஒன்றை அடுத்து இந்த விவகாரம் பாகிஸ்தானில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் இருந்து கிம் ஹட்டாஸ் அவர்களின் காணொளி.