மறக்கப்பட்ட ஆப்கான் அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறக்கப்பட்ட ஆப்கான் அகதிகள் - காணொளி

  • 4 மே 2014

உலகில் பெருமளவில் நெருக்கடிக்கு உள்ளாகும் அகதிகளாக பார்க்கப்படும் சிரியா முதல் மத்திய ஆப்பிரிக்க குடியரசு வரையிலான நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மத்தியில் பல லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகளின் அவலம் பல சந்தர்ப்பங்களில் உலக மக்களால் மறக்கப்பட்டு விடுகின்றது.

1979 இல் ரஷ்யா ஆக்கிரமித்தது முதல் இன்று வரை தொடரும் ஆப்கானிய அகதிகளின் நெருக்கடி, உலகிலேயே மிகவும் நீண்ட கால அகதிகள் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது.

முப்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பாகிஸ்தானில் மாத்திரம், பதிவு செய்யப்பட்ட 16 லட்சம் ஆப்கான் அகதிகள் தங்கியிருக்கிறார்கள்.

மேலும் பத்து லட்சம் பேருக்கு எந்தவிதமான ஆவணமும் கிடையாது.

ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் தலைவரான அண்டோனியோ குத்தேரஸ் அவர்கள் அண்மையில் இந்த அகதிகளின் நிலைமைகளை ஆராய பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

அவை குறித்து பிபிசியின் கிம் கட்டாஸ் அவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து அனுப்பிய காணொளி.