ஜோர்தானிய தொலைக்காட்சி விருந்தினரின் அட்டகாசம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜோர்தானிய தொலைக்காட்சி விருந்தினரின் அட்டகாசம் - காணொளி

ஜோர்தானிய தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ஒரு களேபரம் உங்களுக்கு சுவாரஸ்யத்தை தரும் என்று நினைக்கிறோம்.

அங்கு இது ஒரு சாதாரண விசயந்தானாம்.

காரசாரமான ஒரு அரசியல் விவாதத்தில் கலந்துகொண்ட இரு விருந்தினர்கள், எல்லை மீறவே, அதனை நிகழ்ச்சி வழங்குனர் கட்டுப்படுத்தப் பார்க்கிறார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை.

அவர்கள் சிரியாவின் நெருக்கடியைப் பற்றி விவாதிக்கிறார்கள். உண்மையில் அது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜந்தான்.

ஆனால், அவர்களது விவாதம் மோதலாக மாறி தொலைக்காட்சி கலையக மேசையை உடைத்து ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஏனையவர்கள் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்த நேர்கிறது.

நல்லவேளை, இங்கு எமது பிபிசி உலக சேவையின் தொலைகாட்சி ஸ்டூடியோவுக்கு வரும் விருந்தினர்கள், நிறையவே பொறுமை உள்ளவர்கள். எங்கள் கலையக செட்டுகளும் கொஞ்சம் கூடவே பலமானவை.

காணொளியைப் பாருங்கள்.