ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிகை திருத்துவோர் ஆற்றும் கலாச்சார பங்கு - காணொளி

உலகின் மிகப் பழமையான தொழில்களில் நாவிதத் தொழிலும் ஒன்று.

இந்தத் தொழிலின் வரலாறு கலாசாரத்துக்குக் கலாசாரம் வேறுபடுகிறது. உலகில் கிரீஸ், ரோம் போன்ற இடங்களில் சிகை திருத்தும் நிலையங்கள் சமூக மையங்களாகவும், கிசு கிசு செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் இடங்களாகவும் இருந்து வந்திருக்கின்றன.

இந்தியாவிலும், இவை இது போன்ற முக்கியமான கலாசாரப் பங்காற்றிவந்ததுடன், சம காலத்தில், அவை அரசியல் ,சமூகம் போன்ற பல விஷயங்களைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இடங்களாகவும் இருக்கின்றன.

குடும்பத்தின் மத மற்றும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளிலும், நாவிதர்களுக்கு முக்கிய இடமுண்டு. பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதிலிருந்து, துக்க வீடுகளில் நடக்கும் சடங்குகள் வரை சிகை அலங்காரத் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

இவர்கள் குறித்த ஒரு காணொளி.

உங்களுக்கு இது போன்ற நாவிதர் குறித்த குறிப்பான கதை ஏதும் இருக்கிறததா? அதை எங்களுடன் பகிருங்களேன்.