ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கைகளை கோர்த்துக்கொண்டு பிறந்த இரட்டையர் - காணொளி

13 மே 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:59 ஜிஎம்டி

பிறக்கும் போதே ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மருத்துவர்களை பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளன.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது.

ஒரு அறுவைச் சிகிச்சையின் மூலம் இவர்களை டாக்டர்கள் தாயின் வயிற்றில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அப்போது இந்தக் குழந்தைகள் கைகளை கோர்த்துக்கொண்டு இருந்தனவாம்.

குறைமாதக் குழந்தைகளாக, 33 வாரங்களிலேயே பிறந்த ஜென்னா மற்றும் ஜிலியன் ஆகிய இந்தக் குழந்தைகள் இன்னும் இரு வாரங்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த காணொளி.