இனி துணைக்கு ஒரு ரோபோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இனி துணைக்கு ஒரு ரோபோ - காணொளி

வீட்டில் உதவிக்கு ஒரு ஆள் தேவைப்படுபவர்களுக்கு ஜப்பானிய மோபைல் தொலைபேசி கம்பனி ஒன்று ஒரு வழி கண்டுபிடித்துள்ளது.

பெப்பர் என்ற பெயரில் மனிதனைப் போன்ற உருவம் கொண்ட ஒரு ரோபோவை அது கண்டுபிடித்துள்ளது. கடைகளில் அது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய அதனைப் பயன்படுத்தலாம்.

ஒரு நடன ரோபோவாக மாத்திரமல்லாமல், மனிதர்களின் உணர்வு பிரதிபலிப்புகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு துணையாக இருக்கவும் அதனால் முடியும்.

அடுத்த வருடம் தனிப்பட்டவர்களின் பாவனைக்காக அதனை சந்தைக்கு விட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த ரோபோவின் காணொளியை இங்கு காணலாம்.