பெட்ரோல் நிலைய விபத்தில் ஓட்டுனரை காப்பாற்றியவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெட்ரோல் நிலைய விபத்தில் ஓட்டுனரை காப்பாற்றியவர் - காணொளி

அமெரிக்காவில் கடந்த வாரம் கார் ஒன்று பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் வந்து மோதி, எரிந்து வெடித்ததில் அருகே நின்றிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ஆனால், நியூயோர்க் மாநில பாதுகாவலரான அந்த ஜோண் வெஸ்ஸியோ அவர்கள், மோதிய காரின் ஓட்டுனர் காரில் இருந்து வெளியே வராததைப் பார்த்துவிட்டு, திரும்ப ஓடி வந்த, தனது உயிரையும் பொருட்படுத்தாது ஓட்டுனரை மீட்டிருக்கிறார்.

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்தியதால், தான் உடனே ஓடி வந்து கார் ஓட்டுனரை காப்பாற்றியதாக அவர் கூறினார்.

நீரிழிவு நோயாளியான அந்த ஓட்டுனருக்கு, உடலில் சர்க்கரையின் அளவில் ஏற்பட்ட மாற்றத்தால், உருவான மயக்கத்தால், காரை மோதியதாக போலிஸார் கூறுகின்றன.

அந்தச் சம்பவம் குறித்த காணொளி.