ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் வீழ்ந்தவர் மீட்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் வீழ்ந்தவர் மீட்பு - காணொளி

ஜெர்மனியில் பூமிக்கடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் 11 நாட்களாக சிக்குண்டு கிடந்த குகை ஆராய்ச்சியாளர் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் மீட்டு பூமியின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஜோஹான் வெஸ்தொஸர் என்ற 52 வயதான இவர் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளின் குகைகளை ஆராய்ந்த ஒரு வல்லுநர்.

இவர் தனது ஆராய்ச்சிகளை ஒரு குகையில் நடத்திக்கொண்டிருக்கும்போது, பாறாங்கல் ஒன்று விழுந்ததில் தலையில் காயமடைந்தார். இவரது காயங்களின் அளவு குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை.

ஆனால் அவரை மீட்ட பவேரியன் மலைப் பகுதி மீட்புச் சேவை அவரை நல்ல நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறுகிறது. இவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படும் என்று அது கூறியிருக்கிறது.

மீட்புப் பணியாளர்கள் அவரை ஏறக்குறைய 300 மீட்டர் ஆழத்தில் இருந்து ஒரு குறுகிய குழாய் வழியாக மிகவும் மெதுவாக உயரே எடுத்து வந்தனர்.

வெஸ்ட்தௌஸர் " ரிசெண்டிங்" என்ற குகை அமைப்பை முதலில் கண்டுபிடித்த குழுவினரில் ஒருவர்.

இவை குறித்த காணொளி.