மிதவாத பிக்கு தாக்கப்பட்டார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மிதவாத பிக்கு தாக்கப்பட்டார் - காணொளி

  • 19 ஜூன் 2014

முஸ்லிம்களுக்கு ஆதரவானவராக கடும்போக்கு பௌத்த பிக்குமாரால் விமர்சிக்கப்பட்ட ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளரான வட்டரக்க விஜித தேரர் தாக்குதலுக்கு உள்ளாகி வீதியில் கிடக்கக் காணப்பட்டுள்ளார்.

கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர் தற்போது, கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சில பிக்குமாரே தன்னைத் தாக்கியதாக வட்டரக்க விஜித தேரர் தன்னிடம் கூறியதாகவும் அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

ஏற்கனவே கடும்போக்கு பௌத்த அமைப்புக்களால் மிரட்டலுக்கு உள்ளாகியிருந்த அவருக்கு, போதுமான பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினாலேயே அவர் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விஜித தேரரின் மர்ம உறுப்பு உட்பட பல இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவை குறித்த காணொளி.