பிரேஸிலில் மீண்டும் ஆர்ப்பாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரேஸிலில் மீண்டும் ஆர்ப்பாட்டம் - காணொளி

  • 20 ஜூன் 2014

பிரேஸிலின் நகரான சாவோ பௌலோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடியுள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் வேளையில், அங்குள்ள ஒரு வங்கியையும், ஆடம்பரமான கார் விற்பனை நிலையத்தையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

அவர்களைக் கலைக்க போலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.

போக்குவரத்துக்கட்டணம் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் ஆகியவற்றுக்காக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனாலும், கால்பந்து ஆட்டங்கள் இவற்றால் பாதிக்கப்படவில்லை.

விளையாட்டரங்கத்தில் இருந்து 25 மைல் தொலைவில்தான் இது நடந்துள்ளது.

இவை குறித்த ஒலிக் குறிப்பற்ற காணொளி.