ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கரையொதுங்கிய திமிங்கிலக்குட்டி 'வீடு' திரும்பியது - காணொளி

ஆஸ்திரேலிய நகரன பிரிஸ்பேனின் தெற்கே, பாம் கடற்கரை அருகே உயிருடன் கரையொதுங்கி இரண்டு நாட்கள் கிடந்த திமிங்கிலக் குட்டி ஒன்றை மீட்புப் பணியாளர்கள் மீண்டும் கடலில் சேர்த்திருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை பின்னேரம் இந்தத் திமிங்கிலம் கடலில் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டது.

முன்னதாக அதை கடலில் கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. திமிங்கிலம் ஒதுங்கிய இடத்திலிருந்து கடல் வரை ஒரு கால்வாயை வெட்டக்கூட முயற்சிகள் எடுக்கப்பட்டன அவையெல்லாம் தோல்வியில் முடிந்தன.

இரண்டு நாட்கள் வரை கடல் மணல்பரப்பில் கிடந்த இந்தக் குட்டித் திமிங்கிலம், நான்கு முயற்சிகளுக்குப் பின்னர், ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்ட முயற்சியில் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த முறை, மீட்புப் பணியாளர்கள், இந்தக் குட்டித் திமிலங்கத்தைச் சுற்றி வலை ஒன்றைக் கட்டிஅதை மோட்டார் படகு மூலம் இழுத்துக் கடலுக்குள் விட்டனர்.

இந்தப் பருவத்தில், அண்டார்க்டிக்காவின் குளிரிலிருந்து வெளியேறி, கடல் நீர் சற்று இதமாக இருக்கும் பகுதிகளுக்கு வர பல திமிங்கிலங்கள் முயல்கையில், இது போன்று திமிலங்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் பல நடக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்