திபெத் வெள்ள விவரங்கள் தர மறுக்கும் சீனா; நேபாளம் கவலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திபெத் நதிநீர் விவரங்கள் தர மறுக்கும் சீனா; நேபாளம் கவலை

தெற்காசியாவின் சமீபத்திய வெள்ளப்பெருக்கில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான முக்கிய நதிகள் இமயமலையையொட்டிய நேபாளம் வழியாக பாய்கின்றன.

ஆனால் அந்த நதிகளின் பிரதான நீர்பிடிப்புப்பிரதேசங்கள் திபெத்தில் இருக்கின்றன.

அங்குள்ள நதிநீர் அளவு தொடர்பான தகவல்களை சீன அரசாங்கம் பகிர்ந்துகொள்ள மறுப்பதால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக கவலைகள் அதிகரித்துள்ளன.