ஆபத்தில் முடியும் “அழகுக்கான அறுவை சிகிச்சைகள்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆபத்தில் முடியும் “அழகுக்கான அறுவை சிகிச்சைகள்”

ஆண்டுதோறும் cosmetic surgery என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோற்ற மேம்பாட்டு அறுவை சிகிச்சையை பல்லாயிரக்கணக்கானவர்கள் செய்துகொள்கிறார்கள்.

பல தனியார் நிறுவனங்கள் இவற்றை அதிதீவிரமாக சந்தைப்படுத்த முனைகின்றன.

அதேசமயம் பிரிட்டன் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான அமைப்பு இத்தகைய சிகிச்சைகளை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள் முறையான பயிற்சியற்றவராக இருந்தால் உருவாகும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளது.

தோற்றத்தை மேம்படுத்த சிகிச்சை எடுக்கச்சென்று, தோற்றம் மேம்படாதது மட்டுமல்ல கூடுதல் சிக்கலால் அவதியுறுபவர்கள் குறித்த பிபிசி செய்திக்குறிப்பு.