குழந்தைகளின் கண்பார்வையை காக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தைகளின் கண்பார்வையை காக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளில் சுமார் எட்டு கோடி குழ்ந்தைகள் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு கண்பார்வை இழப்பு முதல் உயிரச்சுறுத்தல் நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆரஞ்சுநிற சர்க்கரை வள்ளிக்கிழங்கு மூலம் இதை குணப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ரக வள்ளிக்கிழங்கின் மகசூலை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு.