செவ்வாய்க் கிரகத்தில் இறங்கிய கலனுடன் தொடர்பு இழப்பு

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்க முயன்ற ரோபோ ஆய்வுக் கலன் அழிந்துவிட்டதோ என்ற அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை THOMAS KIENZLE
Image caption தொடர்பிழந்த செவ்வாய்க் கலன்

கடுமையான செவ்வாய்க் கிரக சூழல்-வெளியினூடாக இந்தக் கலன் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போது ,தரையிறங்க சுமார் ஒரு நிமிடத்துக்கு முன், அதனிடமிருந்து சமிக்ஞைகள் வருவது நின்று விட்டது.

எந்த முடிவுகளுக்கும் அவசரப்பட்டு வருவதற்கு இது தருணமல்ல , ஆனால் இறங்குகலனுடன் தொடர்பு இழக்கப்படுவது என்பது நல்ல அறிகுறியல்ல என்று இத்திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

முன்னதாக இந்த இறங்குகலனை இறக்கிய விண்கலன் செவ்வாய்க்கிரகத்தைச் சுற்றி வர அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தபோது , ஜெர்மனியில் உள்ள திட்டக்கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் ஆரவாரக் கொண்டாட்டங்கள் நடந்தன.