பெற்றோர்களின் பிரத்யேக பயிற்சி குழந்தைகளின் ஆட்டிசத்தை குணப்படுத்தும்: ஆய்வு

ஆட்டிசம் எனப்படும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இரண்டரை வயது முதல் பெற்றோர் அவர்களிடம் உரையாடும் விதத்தின் மூலம், அவர்களின் குறைபாடு அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

Image caption ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி

மிதமானது முதல் கடுமையான ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் அவர்களின் வினாக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பயிற்சியளிக்கப்பட்டது.

இக்குறைபாடு, அக்குழந்தைகள் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு மிகவும் சிரமமாக உள்ள ஒரு நிலையாக கருதப்படுகிறது.

வழக்கமான சிகிச்சை முறைகளை காட்டிலும், ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொடுத்த சிகிச்சை முறைகளை பின்பற்றிய போது, கடுமையான ஆட்டிச அறிகுறிகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 15 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர் சிகிச்சைகள் நீடித்த மேம்பாடடைய வழிவகுத்ததுள்ளதை, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்