200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அநாதையான 200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"

சட்டவிரோத யானைத்தந்த வணிகத்துக்காக வேட்டையாடுபவர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுகின்றன.

இதனால், பல யானைக்குட்டிகள் அநாதைகளாவதுடன், தனித்து உயிர் வாழ முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றன.

டேவிட் ஷெல்ட்ரிக் வனவிலங்கு நிதியத்தின் முன்னாள் தலைவர் டெஃப்னி ஷெல்ட்ரிக் இருநூற்றுக்கும் அதிகமான அநாதை யானைக்குட்டிகளை அரவணைத்து வளர்த்து மீண்டும் காடுகளுக்குள் அனுப்பியுள்ளார்.

இருநூறு யானைக்குட்டிகள் உட்பட அநாதையாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்ரிக்க வனவிலங்குகளின் வளர்ப்புத்தாயாகவே தன் வாழ்வை செலவழித்தவரின் கதை இது.