செவ்வாயில் ரோபோவை தரையிறக்கும் ஐரோப்பாவின் திட்டம் தொடருமா ?

2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இயந்திர ரோபோவை தரையிறக்க வேண்டும் என்ற ஐரோப்பாவின் லட்சியத்திட்டம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த திட்டத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஐரோப்பாவின் ஆராய்ச்சி அமைச்சர்கள் இன்று ஆலோசிக்க உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஐரோப்பாவின் ஆராய்ச்சி அமைச்சர்கள் இன்று ஆலோசிக்க உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு மண் மாதிரிகளை ஆய்வு செய்து, வாழ்க்கைக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய பிரிட்டிஷ் தயாரிப்பில் உருவான ரோபோ ஒன்று முயற்சிக்க உள்ளது.

ஆனால், இந்த முயற்சியை மேற்கொள்ள மேலும் 400 மில்லியன் யூரோக்கள் தேவைப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஏற்கெனவே இந்த திட்டமானது பல பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக ரோபோவை தரையிறக்கும் முயற்சியில் அமெரிக்கா பல வெற்றிகளை கண்டுள்ளது என்றும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன என்றும் கூறுகிறார் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் ஒருவர்.

தொடர்புடைய தலைப்புகள்