மலேரிய புது மருந்து மரணங்களை குறைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேரிய புது மருந்து மரணங்களை குறைக்குமா?

உலகின் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாக பார்க்கப்படும் மலேரியாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில், முக்கிய மைல்கல்லை கடந்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு இருபது கோடி பேரை பாதிக்கும் மலேரியா, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்குகிறது. இவர்களில் பெரும்பான்மையானாவர்கள் ஆப்ரிக்கர்கள்.

இந்த புதிய தடுப்பு மருந்து மலேரிய மரணங்களை குறைக்க முடியும் என்கிற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.