பள்ளிக்கூடத்தில் நிஜமான விஞ்ஞானம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பள்ளிக்கூடத்தில் நிஜமான விஞ்ஞானம்

பிரிட்டனில் குட்டி விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு. ஒன்பது முதல் பதினொரு வயது வரையிலான சிறுவர்களில் பதினைந்து வீதத்தினர் மாத்திரமே விஞ்ஞானத்தை எதிர்காலத்தில் பாடமாக படிக்க விரும்புகிறார்கள்.

எதிர்காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்களை அறிவியலை நோக்கி ஈர்க்க பிபிசி ஒரு திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளது.

‘Terrific Scientific’ என்ற இந்த திட்டம், பிரிட்டன் எங்கிலுமுள்ள பள்ளிக்கூடங்களில் நிஜமான அறிவியல் சோதனைகளை நடத்தி, யதார்த்தமான அறிவியல் முக்கியத்துவம் மிக்க முடிவுகளை அங்கேயே கண்டறிய விளைகிறது.

இந்த பிரச்சார நடவடிக்கை, மிக அதிக அளவில் பிள்ளைகளை விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் நோக்கி ஈர்க்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிபிசியின் காணொளி.