நார்வே: 77 பேரை கொன்ற பிரிவிக் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டாரா?

நார்வேயில், பலரை கொலை செய்த குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவித்துவரும் அன்டர்ஸ் பிரிவிக்கை, நார்வே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக வழங்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை நார்வே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை ONATHAN NACKSTRAND/AFP/Getty Images
Image caption மாவட்ட நீதிமன்றம் பிரிவிக்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது, நார்வே மக்கள் பலரை அதிர்ச்சியடை செய்திருக்கிறது

வலது சாரி தீவிரவாதியான அன்டர்ஸ் பிரிவிக் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெறியாட்டத்தில், 77 பேர் கொல்லப்பட்டதற்கு, அவர் 21 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்,

படுகொலை நடந்த நார்வே தீவில் அஞ்சலி நிகழ்வுகள்

அவரை தனிமை சிறையில் வைத்து தண்டனை வழங்கிருப்பதன் மூலம் ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக நார்வே மனிதாபிமானமற்ற முறையில், இழிவு படுத்தும் வகையில் அவரை நடத்தியிருப்பதாக, பிரிவிக் வாதிட்டதற்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ஆதரவாக தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை LISE ASERUD/AFP/Getty Images
Image caption அன்டர்ஸ் பிரிவிக் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெறியாட்டத்தில், 77 பேர் கொல்லப்பட்டனர்

நார்வேயில் இந்த தீர்ப்பு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிரிவிக், மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றுவது அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்படலாம் என்றும், பழைய காயங்களை மீண்டும் திறக்க செய்யலாம் என்றும் கவலைகள் அதிகரித்துள்ளன.

மேலும் வாசிக்க:

நார்வே படுகொலைகளின் ஓராண்டு நிறைவு

நார்வே நீதிமன்றத்தில் நாஜி வணக்கம் செலுத்திய கொலைக் குற்றவாளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்