அமெரிக்க புற்றுநோய் மருந்து நிறுவனத்தை வாங்கும் ஜப்பான் நிறுவனம்

ஜப்பானின் மருந்து தயாரிப்பு ஜம்பாவான், டகெடா நிறுவனம் அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அரியாட் மருந்துகள் நிறுவனத்தை 5.2 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பு கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Science Photo Library

இரத்தப்புற்றுநோயின் அரிய வகை வடிவங்கள் மற்றும் பிற அரிய வகைப் புற்று நோய் கொண்டவர்களுக்கு மருந்துகள் தயாரிப்பதில் அமெரிக்காவின் அரியாட் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.

ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்

இரு நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஒழுங்குமுறை அதிகாரிகள் இதற்கு பச்சை கொடி காட்ட வேண்டியது அவசியமாகும்.

வெள்ளிக்கிழமை பங்குசந்தை முடிவடைந்தபோது இருந்த, அரியாட் நிறுவனப் பங்கின் விலையில் 75 சதவீதத்திற்கு அதிகமாகவே டகெடா நிறுவனம் இதற்கு கொடுக்கும் விலை மதிப்பிடப்படுகிறது,

காபி குடித்தால் புற்றுநோய் வருமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?

ஆனால், இதற்கு போட்டியான விலை ஒன்று தர வேறு ஏதாவது ஒரு நிறுவனம் வரும் சாத்தியக்கூறையும் நிராகரிக்கமுடியாது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்..

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்

புற்றுநோயைக் குணப்படுத்தும் நம்பிக்கையூட்டுகின்ற மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து அந்த மருந்துகளை வாங்குவதற்கு, பெரிய மருந்து நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

குழந்தையின் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்திய 'அற்புதம்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்