சிம்பன்ஸி: குட்டிக்காக கொல்லப்படும் குடும்பங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிம்பன்ஸி: குட்டிகளுக்காக கொல்லப்படும் குடும்பங்கள்

குட்டி சிம்பன்சிகளை விற்கும் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல்காரர்களை பிபிசியின் புலனாய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

மேற்கு ஆப்ரிக்க காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட இந்த குட்டிகள், வளைகுடா நாடுகளிலும் சீனாவிலும் செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன.

சென்ற ஓராண்டாக ஆறு நாடுகளில் பிபிசி செய்த புலனாய்வில் ஒரு குட்டி சிம்பன்ஸி பன்னிரெண்டரை ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளது.

2005 ஆம் ஆண்டுமுதல் குறைந்தது நாநூறு சிம்பன்ஸிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என ஐநா புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சிம்பன்ஸி குட்டிகளே இப்படி கடத்தப்படுகின்றன. ஒரு குட்டியை பிடிப்பதற்காக பத்து பெரிய சிம்பன்ஸிகள் கொல்லப்படுகின்றன.

சிம்பன்ஸிகள் உள்ளிட்ட குரங்கினங்களில் அறுபது சதவீதமானவை அழிவின் விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஐவரி கோஸ்டில் பிபிசி ரகசியமாக இந்த புலனாய்வை மேற்கொண்டது.