மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் நான்கு புதிய பொந்து தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவியான சோனாலி கார்க், பல உயிரனங்களின் வாழ்விடமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஐந்து வருடங்கள் மேற்கொண்ட விரிவான ஆய்விற்கு பிறகு இந்த புதிய இனங்களை கண்டறிந்துள்ளார்.

இந்த புதிய தவளையினங்கள், `ஃபெஜெர்வர்யா` என்ற இந்திய தவளை இனத்தைச் சார்ந்தது.

மேலும், "இந்த கண்டுபிடிப்புகள், தவளைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்களிக்கும்" என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

"புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளைகள் குறித்து நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்; மேலும் அதன் பாதுகாப்பு நிலை குறித்து அறிந்து கொள்ள பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என சோனாலியின் ஆய்வை மேற்பார்வையிட்ட பேராசிரியர் பிஜு தெரிவிக்கிறார்.

இந்த மேற்கு தொடர்ச்சி மலை தவளைகளை விஞ்ஞான ரீதியாக விவரிக்க மேலும் பல விரிவான ஆய்வுகள் தேவை என கார்க் தெரிவிக்கிறார்.

"ஏற்கனவே இந்த தவளைகள் மனிதர்களின் செயல்பாடுகளால் அழிவு நிலையில் உள்ளன" என கார்க் தெரிவிக்கிறார்.

கடந்த பத்து வருடங்களில் பல புதிய தவளை இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகளவில் பல்லுயிர் வாழ்விற்கான குறிப்பிட தகுந்த இடங்களில் முக்கிய இடமாக மாற்றியுள்ளது.

2016ஆம் ஆண்டு மண்ணுக்குள் புதையும் தவளைக் குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது ; மேலும் அதே வருடத்தில் 100 வருடங்களுக்கு முன்பே அழிந்திருக்க கூடும் என்று நம்பப்பட்ட தவளை இனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்