மாஸ்கோ நதியின் தூய்மையின் ரகசியம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாஸ்கோ நதியின் தூய்மை ரகசியம் என்ன?

கடந்த சிலவாரங்களில் மாஸ்கோவை தாக்கிய புயல் மற்றும் பெருமழையில் வேரோடு விழுந்த மரங்கள் பல ரஷ்யத் தலைநகரின் நதியில் மிதக்கத்துவங்கின.

ஆனால் ரஷ்ய தயாரிப்பான குப்பை அள்ளும் படகுகள் நகரின் நதியை தூய்மையாக வைத்திருக்கின்றன.

அத்தகைய படகு ஒன்றில் பயணித்தார் பிபிசி செய்தியாளர்.

அடிப்படையில் குப்பை அள்ளும் இந்த படகு மாஸ்கோ நதியின் நாற்பது மைல் நீளத்துக்கு மேலும் கீழுமாக பயணித்து நதியிலுள்ள குப்பைகளை சேகரிக்கிறது.

படகில் பயணிக்கும் பணியாளர்கள் நீண்ட கழியால் குப்பைகளை ஒன்றுசேர்க்கிறார்கள். அதை அப்படியே படகின் குப்பை அள்ளும் தட்டுப்பகுதிக்கு தள்ளுகிறார்கள்.

செடிகொடிகள் முதல் கார்கள் வரை பலதும் நதியில் மிதக்கும். உயிருள்ள மீன்களும் கூட சிக்கிக்கொள்ளும். சேகரமாகும் அனைத்தும் படகின் கண்டெய்னர் பகுதிக்குள் கொட்டப்படும்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஏழுடன் குப்பைகளை இந்த படகுகள் சேகரிக்கின்றன.

இதில் எல்லாவகையான பொருட்களும் இருக்கும். மரக்கிளை முதல் மதுபாட்டில்கள் வரை. இந்த குப்பை அனைத்தும் இறுதியில் மாஸ்கோ நகரின் குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும்.

அதற்கு முன்பாக நதியில் தம் பொருட்களை தவறவிட்டவர்கள் வந்து கேட்டால் அவர்களுக்கு அவை அளிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்