அழிவின் விளிம்பிலுள்ள விலங்கினங்களின் குட்டிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 செப்டம்பர், 2011 - 15:04 ஜிஎம்டி
  • மடகாஸ்கரில் மட்டும் காணப்படுகின்ற லெமுர் (Lemur) இன விலங்குகளில் ஒரு வகையான கொக்கரெல் சிஃபாகா (Coquerel Sifaka) அழகான தோற்றம் கொண்டது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தின் குட்டி ஒன்று அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் உள்ள லெமுர் பாதுகாப்பு மையத்தில் பிறந்துள்ளது.
  • சீனாவில் வனங்களில் வாழுகின்ற பாண்டா (Panda) கரடி இனத்தின் எண்ணிக்கைகள் பெரிதும் குறைந்துவிட்டன. இந்த இனத்தை அழிய விடாமல் பாதுகாப்பதற்காக விசேட மையங்களில் பாண்டா இனவிருத்தி செய்ய்ப்படுகிறது. செங்டூ ஆராய்ச்சி மையத்தில் செயற்கை கருத்தரிப்பு வழியில் பிறந்த பாண்டா கரடிக் குட்டி இது.
  • ஐரோப்பாவில் காணப்பட்ட பார்பரி (Barbary) வகை சிங்கங்கள் 1940களிலேயே வனங்களில் அழிந்துவிட்டன. தற்போது இவை ஆங்காங்கே மிருக காட்சி சாலைகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன. பெல்ஃபாஸ்ட் நகர மிருக காட்சி சாலையில் பிறந்துள்ள பார்பரி சிங்கக் குட்டி இது.
  • மடகாஸ்கரைச் சேர்ந்த இரவில் வேட்டையாடும் குரங்கினமான 'அயெ அயே'க்களை (Aye Aye) அழிவில் இருந்து பாதுகாக்க, அவ்வினக் குட்டிகளை ஒரு வருட காலம் வரையில் இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து பின்னர் வனத்தில் விடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
  • இந்திய காண்டாமிருக இனத்துக்கும் அழிந்துபோகக்கூடிய ஆபத்து இருக்கவே செய்கிறது. காண்டா மிருகங்களின் கர்ப்ப காலம் 16 மாதங்கள் ஆகும். பிறக்கும் காண்டாமிருகக் குட்டிகள் 90 கிலோ வரை எடையிருக்கும். மிருகக் காட்சி சாலையில் பிறந்த ஒரு காண்டாமிருகக் குட்டி இது.
  • புலால் உண்ணி கங்காரு வகைகளில் மிகப் பெரிய விலங்கு என்றால் அது இந்த 'டாஸ்மேனியன் டெவில்'தான்(Tasmanian Devil). 1990களில் இந்த விலங்குகள் அழிவின் விளிம்புக்கு வந்தன. ஆதலால் இந்த விலங்கினங்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் வளர்த்து, புதிதாக பிறந்த குட்டிகளை அரவணைப்பாக வைத்திருந்து இயற்கை ஆர்வலர்கள் பேணிக் காக்கின்றனர்.
  • அமேஸான் மழைக் காடுகளில் காணப்படும் இந்த 'பியெட் டமரன்' (Pied Tamarin)வகை குரங்கினம் அழிந்து போகக்கூடிய ஆபத்து மிக அதிகமாகவுள்ளது. இந்த இனக் குட்டிகளை விசேடமாக ஆட்கள் நியமித்து பாலூட்டி வளர்த்தாவது காப்பாற்றும் முயற்சியில் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • ஆப்பிரிக்காவில் சட்டவிரோத வேட்டையின் விளைவாக யானைக் குட்டிகள் பல அனாதைகளாக நேர்கின்றன. அவற்றை பாதுகாப்பாக வளர்த்து, பின்னர் அவற்றை வனங்களில் விடும் பணிய்ல் பிரிட்டனின் டேவிட் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தில் பிபிசி தயாரிப்பாளர் மார்டின் ஹியூஸுடன் அனாதையான குட்டி யானை ஒன்று.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.