நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான ஐநா மாநாடு பலன் தருமா?

படத்தின் காப்புரிமை UN

நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான ஐ.நா. மன்றத்தின் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன்கிழமை துவங்குகிறது. உலகநாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் நீடிக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் தங்களின் நுகர்வு கலாச்சாரத்தை படிப்படியாக குறைத்துக்கொள்வது, வளரும் நாடுகள் தங்களின் தொழில் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பதில் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, எரிசக்தி மற்றும் சுகாதார வசதிகளை உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக ஆக்குவது ஆகிய கொள்கைகளையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ரியோ டி ஜெனிரோ மாநாடு முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், இதில் விவாதிக்கப்பட இருக்கும் விவகாரங்கள் குறித்தும் சென்னையில் இருக்கும் எம் எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான நிபுணர் முனைவர் ஏ அறிவுடை நம்பி அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை