உடற்பயிற்சியின்மையால் மரணங்கள்

சோம்பல்
Image caption 'சோம்பியிருத்தல் மரணத்தை விளைவிக்கும் '

புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்க்கு சமாந்திரமாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்று கண்டறிந்திருக்கிறது.

மருத்துவ சஞ்சிகையான "தெ லான்செட்"டில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கான்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த உடற்பயிற்சியின்மை என்ற பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் இந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டனில், மூன்றில் இரண்டு வயது வந்தோர், பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை செய்யத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.