மருந்துக்கு கட்டுப்படாத எச்ஐவி தொற்று அதிகரிக்கிறது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 ஜூலை, 2012 - 11:41 ஜிஎம்டி

மருந்துக்கு கட்டுப்படாத எச் ஐ வி தொற்று கிழக்கு ஆப்பிரிக்காவில் வேகமாக அதிகரித்துவருவதாக உலக சுகாதாரத்துறையின் ஆய்வு எச்சரித்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனமும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து செய்த ஆய்வின் படி கிழக்கு ஆப்ரிக்காவில் எச் ஐ வி வைரஸானது வேகமாக மருந்துக்கு கட்டுப்படாத தன்மையை அடைந்துவருவதாக தெரிய வந்திருக்கிறது.

உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே மருந்துக்கு கட்டுப்படாத தன்மை காணப்படும்.

அனால் கிழக்கு ஆப்ரிக்காவில் இப்படியானவர்களின் சதவீதம் 29 சதவீதமாக இருப்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இது ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிரித்துக்கொண்டிருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்த போக்கு இப்படியே போனால், கடந்த பத்து ஆண்டுகளாக எயிட்ஸ் மரணங்கள் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும் நிலைமை மாறி, மீண்டும் எயிட்ஸ் மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இவர்களின் எச்சரிக்கையில் உண்மை இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் எச் ஐ வி மருந்துகளை கையாளும் சிறப்பு நிபுணர் மருத்துவர் வளன். எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸுக்கான முறையான மருந்துகளை, சரியான நேரத்தில் சாப்பிடாமலிருப்பது எச் ஐ வி வைரஸின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்திவருகிறது என்கிறார் அவர்.

“ஒழுங்கற்ற சிகிச்சை எச்ஐவி வைரஸை தீவிரமாக்கும்”

எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸுக்கான முறையான மருந்துகளை, சரியான நேரத்தில் சாப்பிடாமலிருப்பது எச் ஐ வி வைரஸின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்தும் என்கிறார் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ நிபுணர் வளன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.