நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 அக்டோபர், 2012 - 16:36 ஜிஎம்டி

நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.

பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.

இதுவரை வானியலாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் வானியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

நெப்டியூனைவிட இந்த புதிய கிரகம் கொஞ்சம் பெரிய அளவில் இருப்பதாகவும் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் முக்கியத்துவம் குறித்து, சென்னையில் இருக்கும் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மையத்தில் இயக்குநர் ஐயம்பெருமாள் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வானியல் வரலாற்றில் முதல்முறையாக நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.