அழிந்த அரிய தவளையினம்

Image caption குரல்வளையில் தவளைக்குஞ்சுகளுடன் டார்வின் தவளை--- அழிந்தது இந்த இனம்

புகழ் பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் பெயரிடப்பட்ட ஒரு தவளையினம் அழிந்தொழிந்து போய்விட்டது என்று சிலி மற்றும் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறியிருக்கிறனர்.

வட டார்வின் தவளை என்ற இந்த தவளையினம், நீர்-நிலம் வாழ் பிராணிகளைத் தொற்றிய ஒரு வித மோசமான தோல் வியாதி காரணமாக, அதன் தென்னமெரிக்க வாழ்விடங்களிலிருந்து முழுதுமாகக் காணாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,

இந்த தவளையின் உறவினமான, தென் டார்வின் தவளையினமும், எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் அறிவியல் சஞ்சிகையான "ப்லோஸ் ஒன்" என்ற சஞ்சிகையின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தவளையினம், 1830களில் சார்லஸ் டார்வின் எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் உலகக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவரால் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இனத்தின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், இந்தத் தவளைகளின் குஞ்சுகள் ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப்படுவதுதான்.