ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மங்கள்யான் வெற்றி மாணவர்களை ஊக்குவிக்குமா?

  • 1 டிசம்பர் 2013
Image caption மங்கள்யான் பயணத்தை விபரிக்கும் படம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலன், மங்கள்யான், பூமியின் நீள் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறி, செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது.

அடுத்த 300 நாட்களில் இந்த விண்கலன் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விஞ்ஞானிகள் இதை ஒரு மைல்கல் என்று கூறியுள்ளனர். ஆனால் சந்திரயான் மற்றும் மங்கள்யான் விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எந்த அளவுக்கு இந்தியாவில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் எனும் கேள்விகள் எழுப்பியுள்ளன.

Image caption செயற்கை கோள் தொழில்நுட்பம் குறித்த அராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சில மாணவர்கள்.

சர்வதேச அரங்கில் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்று கூறப்பட்டாலும், அடுத்த தலைமைமுறையினரை எந்த அளவுக்கு மங்கள்யான் போன்ற திட்டங்கள் ஊக்குவித்துள்ளன என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இப்போது சிறிய அளவில் சில பல்கலைகழகங்கள் இப்படியான முயற்சிகளால் உந்தப்பட்டு சோதனைமுறையில் சிறிய செயற்கை கோள்களை வடிவமைத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து விண்ணில் செலுத்தியுள்ளன.

Image caption சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம்.

அவ்வகையில் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. அதை பின்பற்றி ஐ ஐ டி கான்பூர், எஸ் ஆர் எம் பல்கலைகழகம், பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் பலகலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்களும் இஸ்ரோவின் உதவியுடன் ஒரு செயற்கைக் கோளை ஏவுயுள்ளனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளும் அதன் வெற்றியும் நீண்ட கால அடிப்படையில் உரிய பலனைக் கொடுக்குமா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

சந்திரயான் மற்றும் மங்கள்யான் வெற்றிகள் எந்த அளவுக்கு மாணவர்களை ஈர்த்து உத்வேகமளிக்குது ஊக்குவித்துள்ளன என்பது குறித்து பிபிசி தமிழோசையின் சுவாமிநாதன் தயாரித்து வழங்கும் ஒரு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.