பிபிசி ஊடகவியல் கல்லூரி
 
துல்லியத்தன்மை
 

துல்லியத்தன்மை

துல்லியத்தன்மை

 

துல்லியத்தன்மை குறித்து திருமலை மணிவண்ணன், ஆசிரியர், பிபிசி தமிழோசை

எந்த ஒரு செய்தி ஊடகத்துக்கும் மொழியைக் கையாளுவதில் துல்லியத்தன்மை மிகவும் அவசியம். சொல்லப்படும் தகவலை குழப்பம் ஏதுமின்றி நேயர்கள் புரிந்துகொள்ள இது அவசியம். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது இந்த துல்லியத்தன்மை பாதிக்கப்படாமல் செய்திகளைத் தரவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எந்த ஒரு மொழியிலும் வார்த்தைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறும் தன்மை பல சந்தர்ப்பங்களில் இருக்கும்.

போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் சூழ்நிலைக்கேற்ப பொருள் மாறும் தன்மை உண்டு. சென்சிடிவ் என்ற வார்த்தை மென்னுணர்வுகளை கிளப்பும், சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடிய, பிரச்சினையை எழுப்பக்கூடிய என்று சூழ்நிலைக்கேற்ப மொழிபெயர்க்கிறோம். சீரியஸ் என்ற வார்த்தையை, பாரிய, கவனமான, பெரிய, சிக்கலைத்தோற்றுவிக்கக்கூடிய என்று சூழ்நிலைக்கேற்ப பொருள் தருகிறோம்.
^^ மேலேச் செல்ல