ரியோ பாராலிம்பிக்கில் மிதிவண்டி போட்டியில் விபத்து, போட்டியாளர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு

ரியோ பாராலிம்பிக்கில் ஆடவர் மிதிவண்டி போட்டியின்போது விபத்திற்குள்ளாகி இறந்த ஈரான் மதிவண்டி போட்டியாளரான பிராமன் கோல்பார்நெஸ்ஹாடுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது,

48 வயதான இந்த விளையாட்டு வீரர் திடீரென கீழே விழுந்து சாலையோர கல்லில் அவரது தலை மோதி கழுத்து எலும்பு உடைந்தது.

படத்தின் காப்புரிமை PA
Image caption பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு (இடது) தென் ஆப்ரிக்க வீரர் டானி வில்சனை முந்தி செல்ல துரத்தி செல்கிறார்

கிராமன் கோல்பார்நெஸ்ஹாடுவின் இறப்பு உண்மையிலேயே இதயத்தை நெகிழச் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சம்பவம் விளையாட்டு போட்டிகளில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்,

ஞாயிற்றுக்கிழமை நடைபெறயிருக்கும் பாராலிம்பிக் நிறைவு விழாவின்போது, இந்த விளையாட்டு வீரருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. .

தொடர்புடைய தலைப்புகள்