கடன் சுமையால் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் போட்டியிலிருந்து 'ரோம்' விலகுகிறதா?

2024 ஒலிம்பிக் போட்டிகளை ரோம் நகரில் நடத்துவதற்கு, அந்நகரின் சார்பான விருப்ப மனுவிற்கான ஆதரவை ரோம் நகர மேயர் திரும்பப் பெறுவார் என்று தகவல்கள் உலவி வரும் சூழலுக்கு மத்தியில், இத்தாலிய ஒலிம்பிக் கமிட்டி தலைவரை இன்று ரோம் நகர மேயர் சந்திக்கவுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ரோம் நகர மேயர் வர்ஜீனியா ராஜி

ரோம் ரோம் நகர மேயர் வர்ஜீனியா ராஜியின் கட்சியான 5- நட்சத்திர இயக்கம், 2024 ஒலிம்பிக் போட்டிகளை ரோம் நகரில் நடத்துவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உடைந்து வரும் உள்கட்டமைப்புகளுடன் மிகவும் அதிகமாக கடன்பட்டுள்ள ஒரு நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பைத்தியக்காரதனமானது என்று இந்த இயக்கத்தின் தலைவர் பெப் கிரில்லோ கூறியுள்ளார்.

2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விடுத்த விருப்ப மனுவினை ரோம் நகரம் திரும்பப் பெற்றுவிட்டால், பாரிஸ், புடாபெஸ்ட் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய மூன்று நகரங்கள் மட்டும் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு போட்டியிடும்.

ஒரு வருட காலத்துக்குள், 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப் போகும் நாடு எதுவென்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்தெடுக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்