ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் வெற்றி

மெர்சிடிஸ் வாகன நிறுவனத்தின் பந்தய ஓட்டுநர் நிகோ ரோஸ்பெர்க் ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றியடைந்து, அவருடைய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது சாம்பியன் கோப்பையை பெற்று தந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2014-2015 போட்டியின் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார் நிகோ ரோஸ்பெர்க்

இந்த பருவத்தின் நான்கு போட்டிகள் இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில் ,மெர்சிடிஸ் அதனுடைய மிகவும் நெருங்கிய போட்டியாளர் ரெட் புல்லை விட முன்னிலை பெற்று இந்த கோப்பையை வென்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிகோ ரோஸ்பெர்க்கிற்கு 23-வது தொழில்முறை வெற்றி இது

இந்த ஜப்பான் கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் இரண்டாம் இடத்தை, ரோஸ் பெர்க்கினுடைய அணியின் சக போட்டியாளர் லூயிஸ் ஹமில்டன் பந்தயத்தின் பிந்தைய கட்டத்தில் விடுத்த கடும் போட்டியை தடுத்து நிறுத்தி மேக்ஸ் வெர்ஸ்டாபன் வென்றிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்