சீன ஓபன் டென்னிஸ் கோப்பை வென்றார் ஆன்டி மர்ரி

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீன ஓபன் ஆடவர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிரீகேர் டிமீட்ரோஃபை 6-4, 7-6 (7-2) என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்து பிரிட்டனின் டென்னிஸ் வீரர் ஆன்டி மர்ரி கோப்பையை வென்றிருக்கிறார்.

Image caption 2016 ஆண்டு 9 இறுதிப் போட்டிகளில் விளையாடிய ஆன்டி மர்ரி 5ல் வெற்றி

இது 2016 ஆம் ஆண்டு அவரது 5-வது வெற்றியும், அவருடைய தொழில்முறை விளையாட்டில் 40-வது வெற்றியும் ஆகும்.

டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆன்டி மர்ரியை, எதிர்த்து ஆடிய பல்கேரிய போட்டியாளர் கடும் சவாலாக விளங்கினார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சீன ஆடவர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கிரீகேர் டிமீட்ரோஃபை இரண்டு நேர்செட் ஆட்டங்களில் ஆன்டி மர்ரி தோற்கடித்தார்

ஆனால், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் தன்னுடய சிறப்பான விளையாட்டு திறனை சுமார் ஒரு வார காலம் நன்றாகவே வெளிப்படுத்திய ஆன்டி மர்ரி முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

முன்னதாக நடைபெற்ற பெண்கள் டென்னிஸ் இறுதி போட்டியில், பிரிட்டனின் முதல்நிலை வீராங்கனையான ஜோஹானா கோன்டாவை 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அக்னியாஸ்கா ரட்வான்ஸ்கா தோற்கடித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்