புனித நாளில் விளையாடிய கால்பந்து ஆட்டத்தில் இரான் வெற்றி

புனித நாளில் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இரான் தேசிய கால்பந்தாட்ட அணி விளையாடிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் தென்கொரியாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இரான் தேசிய கால்பந்தாட்ட அணி விளையாடிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி

ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய தெஹரான் அஸாடி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, ஷியா இஸ்லாம் நாள்காட்டியின் தொடக்கத்தில் நடைபெற்றது.

இரான் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டி ஆட்டத்தின் போது ஆரவார முழக்கங்களை தவிர்த்துவிட்டு, கறுப்பு ஆடைகளை அணிந்துவர கேட்டுகொள்ளப்பட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆட்டத்தின் போது ஆரவார முழக்கங்களை தவிர்த்துவிட்டு, கறுப்பு ஆடைகளை அணிந்துவர கேட்டுகொள்ளப்பட்டிருந்தனர்

சர்தார் அஸ்மண்ட் 25-வது நிமிடத்தில் அடித்த கோல் இரானை உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதிக்கு கொண்டுசென்றது.

போட்டியின் நடுவில் இடைவெளி நேரத்தில், பாடகர்கள் இஸ்லாமிய பாடல்களை மைதானத்தில் பாடிபோது, இரான் நாட்டு ரசிகர்கள் ''யா ஹுசைன்'' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்