ஷாங்காய் மாஸ்டர்ஸ் சொந்தமாக்கினார் அன்டி மர்ரி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் டென்னிஸ் வீரர் ன்டி மர்ரி, ஸ்பெயின் வீரர் ரோப்பார்டோ பௌடெஸ்டா அகோட்டை இரண்டு நேர் செட்கள் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 2010, 2011 ஆம் ஆண்டுகளிலும் அன்டி மர்ரி ஷாங்காய் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்றுள்ளார்

இந்த வெற்றியின் மூலம், உலக தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிச்சுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளார்.

ஸ்பெயினின் வீரர் ரோப்பார்டோ பௌடெஸ்டா அகோட்டுக்கு எதிரான முதல் செட்டில் சற்றுத் தடுமாறி வென்ற ஸ்காட்லாந்தை சேர்ந்த மர்ரி 7-6(7-1) அடுத்த செட்டை 6-1 என்று மிகவும் எளிதாக வென்றார்.

இந்த டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், ரோப்பார்டோ பௌடெஸ்டா அகோட், நோவாக் ஜோகோவிச்-ஐ தோல்வியடைய செய்தார்.

ஆனால், இறுதிப் போட்டியில் வென்றிருக்கும் அன்டி மர்ரி இந்த ஆண்டில் பெற்றிருக்கும் ஆறாவது வெற்றி இதுவாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தொழில் முறை போட்டிகளில் அன்டி மர்ரி பெற்றிருக்கும் 41-வது வெற்றி இது

2016 ஆண்டில் உலக தரத்தில் முதலிடத்தில் இருக்கும் செர்பிய வீரர் ஜோகோவிச்-ஐ விட 915 புள்ளிகளே குறைவாக பெற்றிருக்கும் 29 வயதான அன்டி மர்ரி, இந்த ஆண்டின் முடிவுக்குள் உலக தரப் பட்டியலில் முதலிடத்தை பெறுவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மூன்றாவது முறையாக மர்ரி வென்றிருக்கும் இந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி, ஆயிரம் தர வரிசைப் புள்ளிகளை அவருக்கு வழங்கியிருக்கிறது,

அக்டோபர் 9 ஆம் நாள் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் போட்டியிலும் அன்டி மர்ரி வென்றது குறிப்பிடத்தக்கது.