டோக்கியோ ஒலிம்பிக்: செலவு குறைப்பு பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தை

2020 ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துகின்ற திட்டங்களில் உருவாகியிருக்கின்ற சிக்கல்களை விவாதிக்கும் பேச்சுவார்த்தைக்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் டோக்கியோவை சென்றடைந்திருக்கிறார்.

Image caption டோக்கியோ 2020 -க்கு ஆகும் செலவு தொடக்க மதிப்பீட்டை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 30 பில்லியன் டாலர்களை விட அதிகமானதாக இருக்கும் என்று தற்போது மதிப்பிடப்படுகிறது

தொடக்க மதிப்பீட்டை விட நான்கு மடங்கு அதிகமானதாக, 30 பில்லியன் டாலர்களை விட அதிகமானதாக இருக்கும் என்று தற்போது மதிப்பிடப்படும் செலவை குறைப்பதற்கு டோக்கியோவின் புதிய ஆளுநர் யுரிகோ கோய்கெ விரும்புகிறார்.

படகு போட்டி மற்றும் துடுப்பு படகு போட்டிகளை நகருக்கு வெளியே 400 கிலோமீட்டர் தொலைவில் நடத்துவது உள்பட சில விளையாட்டு அரங்குகளை நகருக்கு வெளியே திட்டமிடுவதை அவர் முன்மொழிந்திருக்கிறார்.

டோக்யோவில் ஒரே இடத்தில் விளையாட்டுக்களை நடத்தலாம் என்று உறுதிமொழி வழங்கியிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவினரும், சர்வதேச ஒலிம்பிக் குழுவினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்