கபடி உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்றது இந்தியா

இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டியில், போட்டியணியான இரானை இந்தியா 38-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இதற்கு முன்னர் இரண்டு முறை இந்தியா உலகை கோப்பையை வென்றிருக்கிறது.

17 முறை ஏதிரணி ஆடுகளத்திற்கு சென்று வெற்றிகரமாக தாக்குதலை மேற்கொண்ட நட்சத்திர விளையாட்டு வீரர் அஜய் தாகூர் ஈட்டிய 12 புள்ளிகள் இந்தியாவை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றன.

படத்தின் காப்புரிமை AFP/GETTY
Image caption விளையாட்டு அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்திருந்தது

இடைவேளைக்குப் பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் முதலில் அஜய் தாகூரை இரான் வெளியேற்றிய பின்னரும், விட்டுக் கொடுக்காமல் விளையாடிய இந்திய அணி வெற்றி மகுடத்தை வென்றெடுத்தது.

2004 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 2016 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இதனை வென்றுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்