தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Hockey India
Image caption நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது

2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது.

தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது.

இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின் கணக்கை தொடங்கி வைத்தார்.

படத்தின் காப்புரிமை Hockey India
Image caption இந்தியாவின் வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின் கணக்கை தொடங்கினார்

38-வது நிமிடத்தில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர் அலி ஷான் கோல் அடித்து 2:2 என்று புள்ளிகளை சமநிலை படுத்தியபோதும், இறுதி காலிறுதி நேர ஆட்டத்தில் இந்தியாவின் வீரர் நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது.

முன்னதாக, அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை எதிர்த்து இந்தியா ஆடிய போட்டியானது 2:2 என்று சமநிலையில் முடிந்ததால், பெனால்டிக் முறைப்படி 5:4 என்ற கணக்கில் இந்தியா வெற்றியடைந்திருந்தது.

பாகிஸ்தானும் மலேசியாவும் விளையாடிய அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

தொடர்புடைய தலைப்புகள்