இந்திய கிரிக்கெட் வீரர்களின் சதத்தை தாமதமாக்கிய நாய்

இந்தியாவுக்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின்போது நாய் ஒன்று குறுக்கிட்டதால், இடைவேளைக்கு சற்று முன்னதாகவே தேனீர் இடைவேளைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

விசாகபட்டினத்தில் காட்சி திரைக்கு பின்னால் இருந்து ஆடுகளத்திற்கு உள்ளே நுழைத்த இந்த தெரு நாய், காலில் அணிந்திருந்த ஷூவை எறிந்து விரட்டிய ஆடுகள பராமரிப்பாளர்களையும் தவிர்த்து விட்டு உள்ளே நுழைந்துவிட்டது.

ஆடுகளத்தில் விளையாடி கொண்டிருந்த இரு துடுப்பாட்ட வீரர்களும் தங்களுடைய சதங்களை அடிப்பதற்கு சில ஓட்டங்களே பாக்கி இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனால், நடுவர்கள் இடைவேளைக்கு சற்று முன்னதாகவே தேனீர் இடைவேளை விட வேண்டியதாயிற்று.

அந்த இடைவேளை நேரத்தில் "வைஸாக் நாய்" என்ற பெயரில் ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, "கிரிக்கெட்டை விரும்புகிறேன் ஆனால் தேனீர் இடைவேளைக்கு முன்னர் இந்திய வீரர்கள் சதம் அடிப்பதை விரும்பவில்லை" என்ற செய்தி வெளியானது.