கிரிக்கெட்: 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்று தொடரில் முன்னணி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் கடந்த 17-ஆம் தேதியன்று தொடங்கியது. இது இந்திய அணித் தலைவரான விராட் கோலியின் 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

தனது முதல் இன்னிங்ஸில், 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் போது, புஜாராவுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

கோலி, புஜாரா சதம்

படத்தின் காப்புரிமை AP
Image caption புஜாரா மற்றும் கோலி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் போது, புஜாராவுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இந்த இணை பின்னர் நன்கு அடித்தாடினர்.

கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சதமடித்தனர். புஜாரா 119 ரன்களும், விராட் கோலி 167 ரன்களும் எடுத்தனர். தனது முதல் இன்னிங்சில் இந்தியா 455 ரன்கள் எடுத்தது.

விராட் கோலியின் முதல் இன்னிங்ஸ் சதம் குறித்து மேலும் படிக்க:50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா

பின்னர், தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியால் 255 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தனது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 204 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 405 ரன்கள் என்ற சாதனை இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் பொறுமையாக ஆடினார். ஆனால் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஹாசிப் ஹமீதின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியவுடன், இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அபாரமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள்

இறுதியில் இங்கிலாந்து அணியால் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களும் பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விராட் கோலி

இதனால், இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்று தொடரில் முன்னணி பெற்றுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்