கொலம்பிய விமான விபத்து: சப்பகோயென்ஸ் அணியினரின் துக்கத்தில் பங்கேற்ற கால்பந்து உலகம்

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தங்களின் பெரும்பாலான கால்பந்து வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர் ஆகியோரை இழந்துள்ள தெற்கு பிரேசிலில் உள்ள சப்பகோ நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தனது விருப்பமான கால்பந்து அணியை இழந்து விட்ட சோகத்தில் ஒரு சிறுவன்

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியின் ஆதரவாளர்கள், அந்நகரில் மத்தியில் இருந்து சப்பகோயென்ஸ் அணியின் கால்பந்து மைதானத்துக்கு சென்று வேண்டுதல் நடத்தியும், பாடல்கள் பாடியும், பாராட்டு தெரிவித்தும் தங்களின் ஆதரவை அந்த அணிக்கு தெரிவித்தனர்.

கொலம்பிய விமான விபத்து குறித்து மேலும் படிக்க: கொலம்பிய விமான விபத்து: பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தனது அணிவீரர்கள் பெரும்பாலானோரை விமான விபத்தில் இழந்துள்ள பிரேசிலின் சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினரின் துக்கத்தில் கால்பந்து உலகம் பங்கேற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் பயணம் செய்த இந்த சார்ட்டர் விமானத்தில் இருந்த 77 பேரில் 6 பேர் மட்டுமே விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

தங்களின் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய போட்டி என்று கூறப்பட்ட கோபா சூடமெரிக்கானா தொடரின் இறுதியாட்டத்தில் விளையாட அவர்கள் கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்